மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பட்டினப்பாக்கத்தில் தன் வீட்டுக்கு வெளியே தெருவில் வந்த பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றார். இதைக் காட்டும் காணொளி வெளியானது. இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், "நம்முடைய பண்பாட்டுக் கூறுகளை, பாரம்பரிய அம்சங்களைக் கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது. இது கூடாது. பூம் பூம் மாட்டுக்காரர் போன்றவர்களை மறந்துவிடக்கூடாது," என்றார்.
படம்: தமிழக ஊடகம்

