திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பணம், தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பணம், தங்கம் பறிமுதல்

1 mins read

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கைப்பையிலும் ஆசன வாயிலும் 384,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை மறைத்துவைத்திருந்த இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத் என்பவர் கைதானார்.

அதேபோல், கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த இளையான்குடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தன் ஆசனவாயில் 50 பவுன் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். பணமும் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.