ஒரு லிட்டர் கழுதைப் பால் ரூ.4,000க்கு விற்பனை

1 mins read
8982b95f-c328-4ff4-b195-2e74354f0e84
-

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலம், கவுல்பாளையம், நொச்சியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒரு குடும்பத்தி னர் 10க்கும் மேற்பட்ட கழுதை களுடன் ஊர் ஊராகச் சென்று கழுதைப் பாலைக் கறந்து விற்பனை செய்துவருகின்றனர்.

கழுதைப் பால் 50 மில்லி 200 ரூபாய்க்கும் 100 மில்லி 400 ரூபாய்க்கும் 1 லிட்டர் 4,000 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர்.

கழுதைப் பாலை விற்கும் முதியவர் பச்சமுத்து கூறுகை யில், "நாங்கள் கடலுார் மாவட்டம், சன்னாசி நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது. இதைக் குடித்தால் சளி, இருமல், ஆஸ்துமா, கரப்பான், விஷக்கடி உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும்," என்றார்.

இதுகுறித்து பெரம்பலுார் மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் செந்தமிழ்ச் செல்வி கூறுகையில், "கழுதைப் பால் நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவ குணம் கொண்டதாக சித்த மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாள்பட்ட நோயைத் தீர்க்கும் என்பது நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலும் தரக்கூடாது,'' என்றார்.