சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது. இந்தப் பதவிக்கு போட்டியிடுபவர்களின் பட்டியலில் இப்போது எட்டு பேர் உள்ளனர். இந்தப் பட்டியலில் பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், ஏ.பி. முருகானந்தம், சீனிவாசன், வானதி சீனிவாசன், கே.டி. ராகவன் ஆகிய 8 பேர் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இவர்கள் 8 பேரில் ஒருவருக்கு தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஏராளமானோர் போட்டி
1 mins read

