நாங்குநேரி: நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் களக்காடு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு மருத்துவமனையில் அனுமதி
1 mins read

