திருச்சி நகைக்கடை கொள்ளை: இரண்டாவது சந்தேக நபர் சரண்

திருச்சி நகைக்கடை கொள்ளை: இரண்டாவது சந்தேக நபர் சரண்

1 mins read
9516b56c-1c3c-44a2-a2ac-5ccecf7729a5
-

திருச்சியிலுள்ள லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடை திருட்டில் சம்பந்தப்பட்ட இரண்டாவது சந்தேக நபர் சரணடைந்துள்ளார். அதிகாலை 2 மணி அளவில் கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகளைத் திருடினர்.

விலங்கு முகங்களைக் கொண்ட முகமூடிகளை அணிந்துகொண்டு அவர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த நகைகளைக் களவாடி மறைந்தனர்.இவர்கள் வடமாநிலத்தவர்கள் என்ற சந்தேகம் எழுந்து, அதன் தொடர்பில் அரசியல் சார்ந்த கலந்துரையாடல்கள் சமூக ஊடகங்களில் முளைத்துவந்தது. ஆனால், இறுதியில் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் போலிசாரிடம் பிடிபட்டார்.

கொள்ளைச் சம்பவத்தின் மற்றொரு சந்தேக நபரான சீராத்தோப்பு சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.