கால் மேல் கால் போட்டு அமர்ந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கால் மேல் கால் போட்டு அமர்ந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு

1 mins read

தேனி: தேனி அருகே கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த காரணத்திற்காக இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான சுந்தர் தனது வீட்டுவாசலில் அமர்ந்து கைபேசியில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற கண்ணன் என்பவர் ஏன் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளாய்? எனக்கேட்டு சுந்தரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மோதல் முற்றவே கண்ணன் தான் வைத்திருந்த அரிவாளால் சுந்தரை வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுந்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கண்ணன் தலைமறைவானார். போலிஸ் விசாரணை தொடர்கிறது.