பாட்னா: இயக்குநர் மணிரத்தினம், நடிகை ரேவதி. அபர்ணாசென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வழக்கைத் திரும்ப மீட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளது பீகார் காவல்துறை.
அத்துடன் தவறான புகார் அளித்ததாக சுதிர்குமார் மீது பீகார் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வட மாநிலங்களில் மத ரீதியான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்தப் பிரபலங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இது நாட்டின் ஒற்றுமையைக் களங்கப்படுத்துவதாகக் கூறி முசாபர் நகரைச் சேர்ந்த சுதிர்குமார் என்ற வழக்கறிஞர் பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

