தமிழக முதல்வர்: லண்டன் செல்வது குறித்து ஸ்டாலின் விளக்கவேண்டும்

தமிழக முதல்வர்: லண்டன் செல்வது குறித்து ஸ்டாலின் விளக்கவேண்டும்

1 mins read
d7c72dcf-b512-44ec-9195-f58c7e692b4d
-

நாங்குநேரி: நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்தார்.

"லண்டனுக்கு மருத்துவ சிகிச்சைக்காகத்தான் ஸ்டாலின் அவ்வப்போது சென்று வருகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

"ஏனெனில் திமுக ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை லண்டனில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை என்பதை ஸ்டாலின்தான் விளக்க வேண்டும்.

"தேர்தல் வந்துவிட்டாலே திண்ணைப் பிரசாரம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையில் மு.க.ஸ்டாலின் ஈடுபடுகிறார்.

"மக்களுக்காகப் போராடும் ஒரே கட்சியான அதிமுகவுக்கு வாக்களியுங்கள்," என்றார்.