கள்ளநோட்டை புழங்கவிட்ட கும்பல் தலைவன் வாக்குமூலம்

கோவை: கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு கைதான கும்பல் தலைவன் தன்ராஜ் போலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “என்னால் மட்டும் இந்தப் பணத்தை மக்களிடம் புழங்கவிட முடியாது என்பதால் மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே இந்த செயலில் ஈடுபட்டு வந்தேன். இப்போது கூண்டோடு அனைவரும் சிக்கிக்கொண்டோம்,” என்று கூறியுள்ளான்.

இந்த கும்பலுடன் தொடா்புடைய மேலும் மூவரைப் பிடிக்க தனிப்படை போலிசார் வலை விரித்துள்ளனர்.

‘‘நான் சில ஆண்டுகளாகவே கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுவருகிறேன்.

“கள்ள ரூபாய் நோட்டு தயாரிக்க ஒதுக்குப்புறமான பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இரவு நேரத்தில் கள்ளநோட்டுகளை அச்சடித்தேன்.

“கோவை நகரில் கள்ளநோட்டு தொடர்பாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. இதனால் தைரியமாக பல லட்ச ரூபாய் அச்சடித்து தயாராக வைத்திருந்தேன். அதற்குள் மாட்டிக்கொண்டேன்,’’ என்று இடிகரையைச் சோ்ந்த கள்ளநோட்டு கும்பல் தலைவன் தன்ராஜ் கூறியுள்ளான்.

தன்ராஜ் வீட்டில் போலிசார் நடத்திய சோதனையின்போது, கள்ளநோட்டு தயாரிக்கும் பிரிண்டர், ஸ்கேனர், பச்சை மை, ஜெராக்ஸ் இயந்திரம், ஏ4 அளவுத் தாள்கள் கலர் ஜெராக்ஸ் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கிட்டத்தட்ட 14 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ளரூபாய் நோட்டு களை குவித்து வைத்திருந்தனர்.

கோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்து, அதை நல்ல நோட்டு களுடன் சேர்த்து புழக்கத்தில் விட்ட நால்வரை போலிசார் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கத்தை கத்தையாக ரூ.14 லட்சம் பணத்தையும் கள்ளநோட்டுகள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் போலிசார் பறிமுதல் செய்தனா்.

கோவை, பொன்னைய ராஜபுரத்தைச் சோ்ந்த ஜான் சாக்கோ, 55, என்பவர் காந்தி பூங்கா பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடைக்கு வந்த இரு இளைஞா்கள் ரூ.100 நோட்டை கொடுத்து குளிா்பானம் கேட்ட போது, அந்தப் பணம் கள்ளநோட்டு என்பதை ஜான் சாக்கோ உறுதி செய்தாா். இதையடுத்து, ஆா்.எஸ்.புரம் போலிசாரிடம் ஈரோடு மாவட்டம், கே.கே.நகரைச் சோ்ந்த பூபதி, 26, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டியைச் சோ்ந்த பிரவீன்குமாா், 23, ஆகிய இருவரும் பிடிபட்டனர்.

இவர்கள் கணபதி பகுதியில் உள்ள 27 வயது ரஞ்சித்திடம் கள்ள நோட்டுகளைப் பெற்றதாகக் கூற, அவரும் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் இடிகரையைச் சோ்ந்த கும்பல் தலைவன் தன்ராஜும் வசமாக சிக்கினார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!