தமிழகத்தில் 5 நாள் கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாள் கனமழை வாய்ப்பு

1 mins read

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தமிழகத்தில் நேற்றுமுதல் அக்டோபர் 18 வரை ஐந்து நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.