சுடச் சுடச் செய்திகள்

மசாலா தொழிற்சாலை தீயில் பலகோடி சொத்துகள் சேதம்

தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டியில் இயங்கிவந்த ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்புத் தொழிற்சாலைக் கிடங்கின் பின்பக்கத்தில் நேற்றுக் காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தீவிபத்தில் ஆலையில் இருந்த இயந்திரங்கள், மசாலாப் பொருட்கள் என பலகோடி மதிப்பிலான பொருட்கள் கருகி அழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. நான்கு தீயணைப்பு வாகன வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் சம்பவ இடத்திற்கு விரைந்தார். படம்: தமிழக ஊடகம்