பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு

பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு

1 mins read

செந்துறை: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் நிர்வாகி இறந்துவிட்டதால் அவர்களின் வாரிசுகள் பள்ளியை நிர்வகித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் இரு ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும். தற்போது தலைமையாசிரியையாக ராஜேஸ்வரியும் செங்குட்டுவன் என்ற ஆசிரியரும் மற்றொரு பெண் ஆசிரியரும் பணியில் உள்ளனர். இந்நிலையில் தலைமையாசிரியை ராஜேஸ்வரி தளவாய் போலிசில் புகார் தெரிவித்தார்.

அதில் பள்ளியிலுள்ள கழிப்பிடத்திற்கு சென்றபோது அங்கு நின் றிருந்த ஆசிரியர் செங்குட்டுவன், தனது கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் செங்குட்டுவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.