திருச்சி: லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையன் முருகனுக்கு இளம் தமிழ் நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். தற்போது தமிழக போலிசாரின் கட்டுப்பாட்டில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மாநிலம் வாரியாக கொள்ளையடித்தவர் முருகன். இதனிடையே முருகனை பற்றிய பரபரப்பு தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு தெலுங்கு சினிமா உலகில் ஏகப்பட்ட ஆட்டம் போட்டதாகவும் துணை நடிகைகள், நடிகைகளுக்கு பணத்தை அவர் வாரி இறைத்ததாகவும் எய்ட்ஸ் நோய் வந்தபின்னர் ஆட்டம் அடங்கியதாகவும் ஊடகங்களில் பலவாறாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
சில நடிகைகளுடன் முருகனுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் அடிபடுவதால் போலிசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாநகர போலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் பிரபல இளம்வயது நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆளைப் பார்த்தால் நடிகையுடன் தொடர்பு இருக்குமா?
"முருகனிடம் நடிகைகள் தங்களது தரத்தை விட்டு கீழே இறங்கி பழகுவார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. போலிஸ் காவலில் எடுத்து முருகனை தீர விசாரித்தால்தான் எந்த நடிகைகளுடன் பழக்கம் உள்ளது என்பது தெரியவரும்.
"அதுவும் பிரபலமான ஓர் இளம் நடிகை என்றால் முருகனிடம் ஜாலி யாக இருந்திருப்பார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், தமிழ் நடிகையுடன் நெருங்கிய தொடர்பு என்பது மட்டும் உறுதியாகி உள்ளது," என்றார் அந்த அதிகாரி.

