சீமானை விமர்சித்த முதல்வர் நாராயணசாமி

சீமானை விமர்சித்த முதல்வர் நாராயணசாமி

1 mins read

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து நேற்று சாமிப்பிள்ளைத் தோட்டம் பகுதியில் முதல்வர் நாராயணசாமி வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "சீமான் தரம் தாழ்ந்த அரசியல்வாதி. ராஜீவ் காந்தி மனித வெடி குண்டால் உயிரிழந்தது எங்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. ராஜீவ் இறப்பை கொச்சைப்படுத்திப் பேசும் சீமான் அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவர். முன்னுக்குப்பின் முர ணாகப் பேசி விளம்பரம் தேடுபவர் அவர். எந்தத் தேர்தலி லும் அவர் கட்சியினர் டெபாசிட் கூட வாங்கியதில்லை. திருந்தாவிட்டால் மக்கள் அவரை திருத்துவார்கள்," என்றார்.