திருவள்ளூர்: தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான 'அசுரன்' பட பாணியில் நீதிமன்றத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்தவர்களை மிரட்டியதாக 27 மாணவர்களை போலிஸ் கைது செய்தது. திருவள்ளூர் மாவட்டம், மேலமனம்பேடு எனும் ஊரில் வெங்கடராமன் என்பவர் கடந்த ஆண்டு கொல்லப்பட்டார். அவ்வழக்கு தொடர்பில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை நந்தனம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 27 பேர் நேற்று முன்தினம் நீதிமன்ற வளாகத்தில் கூடி நின்று, சாட்சியளிக்க வந்தோரை மிரட்டும் தொனியில் முறைத்துப் பார்த்தனராம். இதையடுத்து, கஜேந்திரன் என்பவர் புகாரளிக்க, அவர்கள் கைதாகினர்.
'அசுரன்' பாணி: சாட்சிகளை மிரட்டிய மாணவர்கள்
1 mins read

