வேகமாகப் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

வேகமாகப் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

1 mins read

பருவமழை காலங்களில் 'மெட்ராஸ் ஐ' எனப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் வருவது வழக்கமான ஒன்று. தற்போது பருவமழை காலம் ஆரம்பித்திருப்பதால் தமிழகத்தில் சென்னை உடபட ஆங்காங்கே 'மெட்ராஸ் ஐ' யால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். தினமும் 10 முதல் 20 பேர் இந்த மருத்துவ

மனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறினார். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தனித்தனியே கைக்குட்டைகளும் தனி படுக்கையும் பயன்படுத்துவதன் மூலம் இதை மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கலாம் என ராஜசேகர் கூறினார். 'மெட்ராஸ் ஐ' பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலிருந்து வழியும் திரவத்தால்தான் மற்றவருக்கு இந்த நோய் பரவுகிறது என கூறப்படுகிறது.