அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா

அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா

1 mins read

சென்னை: அதிமுகவின் 48ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்குக் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கடந்த 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவைத் தொடங்கினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகதான் ஏழு தடவை வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் அந்தக் கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கட்சியாகத் திகழ்கிறது.

அதிமுக ஆட்சி காரணமாக தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் தேசிய உற்பத்தி அளவைவிட அதிகமாக 8 விழுக்காடாகத் திகழ்கிறது என்று அந்தக் கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.