சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துவிட்டதாகத் தெரியவருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில், தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது.
அந்தத் தீர்மானம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

