ஆசிரியை தாக்கியதில் 24 மாணவிகள் காயம்

ஆசிரியை தாக்கியதில் 24 மாணவிகள் காயம்

1 mins read

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் சிவகாமி என்ற ஆசிரியை தாக்கியதில் 24 மாணவிகள் காயம் அடைந்ததாகத் தெரிகிறது. கூகலூர் என்ற ஊரில் உள்ள அந்தப் பள்ளியில் கணித ஆசிரியையாக சிவகாமி வேலை பார்க்கிறார். 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவிகளை ஆசிரியை சிவகாமி தாக்கியதாகத் தகவல் வெளிவந்துள்ளது.