முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே சாம்பக்குளம் ஊராட்சியில் உள்ள இந்திரா நகரில் குடிதண்ணீா் அள்ளும் இடத்தில் சாதிப் பெயரைச் சொல்லி தண்ணீா் தரமறுப்பதால் ஒரு பிரிவினர் உப்பு நீரைக் குடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொற்றுநோய் ஏற்படுமோ என அச்சம் கிளம்பி உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை என்பதால் அந்தப் பகுதி மக்கள் கவலையுடன் நாட்களைக் கடத்துவதாகக் கூறப்படுகிறது.

