வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சிறையில் கைபேசி வைத்து இருந்ததாக முருகன் மீது பாகாயம் போலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முருகன் அறையில் நடந்த சோதனையில் கைபேசி, சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டன.
சிறைத்துறை விதிமுறைகளுக்கு புறம்பான பொருள் வைத்திருந்ததாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

