1,000 பெண்களுக்குக் கருக் கலைப்பு செய்த போலி மருத்துவர் மீண்டும் கைது

1,000 பெண்களுக்குக் கருக் கலைப்பு செய்த போலி மருத்துவர் மீண்டும் கைது

1 mins read

திருவண்ணாமலை: 1,000 பெண்களுக்குக் கருக் கலைப்பு செய்ததாகக் கூறப்பட்டதன் பேரில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட திருவண்ணாமலை போலி மருத்துவர் ஆனந்தி (படம்) பிணையில் விடப்பட்டார்.

பிணையில் வெளியே வந்த ஆனந்தி, வெளி மாவட்டங்களுக்குச் சென்று மீண்டும் கருக்கலைப்பு செய்வதாகப் புகார் தலைகாட்டியது. அதன் பேரில் செயல்பட்ட அனைத்து மகளிர் போலிசார், திருவண்ணா மலையில் பதுங்கி இருந்த போலி மருத்துவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.