ஓசூர்: இந்தியாவில் முதன்முதலாக ஓர் இயக்கத்திற்கு என இளையர் அணியைத் தொடங்கியது திமுகதான் என்பது வரலாறு என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக இளையரணித் தலைவரான அவர், இளை யரணிக்கு முப்பது லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
"இந்த இலக்கை எட்டிப் பிடிப்பதற்கான பணியில் இளையர் அணியினர் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகின்றனர். இதில் பாதி பேர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை ஏறக்குறைய தொட்டுவிட்டார்கள். இளைஞர் அணியை இன்றும் துடிப்போடும், உயிர்ப்புடனும் வைத்தி ருப்பது திமுகதான்," என்றார் உதயநிதி.
சில மாதங்களுக்கு முன்புதான் இளையர ணிக்கு 30 லட்சம் பேரை புதிதாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

