சாமி சிலைகளை உடைத்த மர்மக் கும்பலால் பதற்றம்

சாமி சிலைகளை உடைத்த மர்மக் கும்பலால் பதற்றம்

1 mins read

ஈரோடு: சிலரால் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து ஈரோட்டில் பதற்றம் நிலவுகிறது.

சிவகிரி அருகே உள்ள தொப்ப பாளையத்தில் உள்ளது காளியண்ணன் கோவில். நேற்று முன்தினம் இக்கோவிலில் உள்ள ஆறடி உயரமுள்ள காளியண்ணன், விளைய காளியண்ணன் கோவில்களை சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இச்செயலில் ஈடுபட்டவர்கள் முகமூடி அணிந்து வந்ததுள்ளனர். பத்து பேர் கொண்ட அந்தக் கும்பல் நள்ளிரவு வேளையில் கோவிலுக்குள் புகுந்து இரண்டு சிலைகளையும் கீழே தள்ளிவிட்டு, பிறகு சம்மட்டி, இரும்புக் கம்பிகளைக் கொண்டு அவற்றை உடைத்துள்ளனர்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி உள்ளது.

இந்தக் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொன் காளியம்மன் கோவில் பொங்கல் விழா அன்று இந்த சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

இந்நிலையில் மர்ம நபர்கள் எத்தகைய நோக்கத்துடன் இத்தகைய செயலில் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. இதனால் சிவகிரியில் பதற்றம் நிலவுகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஈரோடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.