முதல்வர்: பொறுப்புகள் அதிகரித்துள்ளன

முதல்வர்: பொறுப்புகள் அதிகரித்துள்ளன

1 mins read

சென்னை: தமிழகத்தின் ஆறு மாவட்ட தலைநகரங்களில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பிறகு அதற்கான நிகழ்வில் உரையாற்றிய அவர், மாணவர்களாகிய நீங்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும், உங்கள் கல்வி முழுமை பெற, நீங்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கைக் கல்வியையும் சேர்த்து கற்கவேண்டியது அவசியம் என்றார். "கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகளும் அதிகரித்துள்ளன. மனிதவள மேம்பாட்டை ஊக்குவித்து, கல்வியாளர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதும், பல்கலைக்கழக கல்வியில் தமிழ்நாட்டை ஒரு பன்னாட்டு மையமாக உருவாக்குவதுமே தமது அரசின் லட்சியம் என்றார் காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா. அதை தமிழக அரசு பின்பற்றும்," என்றார் முதல்வர் பழனிசாமி.