சென்னை: தொடர் மழையால் கன்னியாகுமரி, கோவையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் பரவலாக மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு
1 mins read

