சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பிரச்சினைகளின்றி நடைபெற்றதாக தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பிற்பகல் சுமார் மூன்று மணியளவில் விக்கிரவாண்டியில் 65%, நாங்குநேரியில் 52% வாக்குகள் பதிவானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
வாக்கு எண்ணிக்கை வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதற்கிடையே இரு தொகுதி களிலும் கணிசமான அளவில் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டன. விக்கிரவாண்டியில் திமுக நிர்வாகி ஒருவர் மீது போலிசார் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்தனர்.
மொத்தத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

