50,000 ரூபாயைக் கடித்துக் குதறிய எலிகள்; தவிக்கும் விவசாயி

50,000 ரூபாயைக் கடித்துக் குதறிய எலிகள்; தவிக்கும் விவசாயி

1 mins read
96e68366-3479-44e3-8e7f-3cf2175a67db
ரூ. 50,000 மதிப்பிலான 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை எலிகள் கடித்துக் குதறிவிட்டன. படம்: ஊடகம் -

அறுவடையில் சம்பாதித்த 50,000 ரூபாயை எலிகள் கடித்துக் குதறியதால் செய்வதறியாது தவிக்கிறார் தமிழக விவசாயி ஒருவர்.

கோயம்புத்தூரின் வெள்ளியங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜ் அறுவடையில் கிடைத்த 50,000 ரூபாயைத் தனது குடிசை வீட்டில் ஒரு பையில் சேமித்து வைத்திருந்தார்.

ரூ.500, ரூ.2,000 மதிப்பிலான அந்த நோட்டுகளை எலிகள் கடித்துக் குதறிவிட்டன.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி வருந்தி, அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிகளுக்கு ஓடினார். ஆனால், யாரும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்திக்கு அளித்த பேட்டியில், ''விவசாய அறுவடைக்குப் பின்னர் நான் சம்பாதித்த பணத்தை எலி கடித்துவிட்டது. இந்தப் பணத்தை உள்ளூர் வங்கிகளில் கொடுத்தேன். ஆனால், அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள்'' என்று ஏக்கத்துடன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்