கனமழை: முதல்வர் ஆலோசனை

கனமழை: முதல்வர் ஆலோசனை

1 mins read

சென்னை: தமிழகத்தில் பருவ மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்வர்

ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராதா

கிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் மிகவும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக எந்த நேரத்திலும் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.