வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் முருகன் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று முன்தினம் சிறைத்துறை தனிக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு 'சிம்கார்டு', ஒரு 'சார்ஜர்' ஆகியன சிக்கியது. இது பற்றி பாகாயம் போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

