திருக்கனூர்: சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று காலை சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைவில் இந்த சாலையைச் சரி செய்யவில்லை என்றால் சாலைமறியலில் ஈடுபடு வோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பத்துக்குச் செல்லும் வகையில் குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம் சாலை உள்ளது. இந்த சாலை யோரம் பல ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்தச் சாலையை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் சரிசெய்யப்படவில்லை.

