ஓடும் பேருந்திலிருந்து 'டீசல் டேங்க்' கழன்று விழுந்தது

ஓடும் பேருந்திலிருந்து 'டீசல் டேங்க்' கழன்று விழுந்தது

1 mins read

கடலூர்: மாணவர்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்திலிருந்து திடீரென 'டீசல் டேங்க்' கழன்று விழுந்ததால் ஓட்டுநர், நடத்துநர் முதல் அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் வரை பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவர்களை மாற்றுப் பேருந்து மூலம் கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு பொதுமக்கள் உதவியுடன் 'டீசல் டேங்க்' பத்தி ரமாக அப்புறப்படுத்தப்பட்டது.

பெரம்பலூரில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு பெண்ணாடம் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேர்ந்தது.