நடிகர் சார்லிக்கு டாக்டர் பட்டம்

நடிகர் சார்லிக்கு டாக்டர் பட்டம்

1 mins read

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றபோது திரைப்பட சிரிப்பு நடிகர் சார்லி உள்பட 150 பேருக்கு டாக்டர் பட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். சார்லிக்கு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டதற்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சார்லி கூறுகையில், இந்தியாவில் மொழிக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகத்தில் நான் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு மகிழ்ச்சி. எனது தாய் - தந்தை ஆசிரியர்கள் ஆவர். அவர்களை போற்றும் விதமாகவும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த டாக்டர் பட்டத்தை சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.