இரு வேறு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் மு.க.அழகிரி முன்னிலை

இரு வேறு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் மு.க.அழகிரி முன்னிலை

1 mins read

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நில அபகரிப்பு வழக்கு தொடர்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையானார். மதுரையில் தயா பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார் அழகிரி. இக்கல்லூரிக்கான கட்டடங்களைக் கட்டுவதற்கு குறிப்பிட்ட நிலப்பகுதிதயை அழகிரி தரப்பு ஆக்கிரமித்ததாகப் புகார் எழுந்தது. அதன் பேரில் அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவானது. இந்த வழக்கு விசாரணைக்காகவே அழகிரி நீதிமன்றத்தில் முன்னிலையானார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தபோது தமது சொத்துகளை கணக்கில் காண்பிக்கவில்லை என்ற புகாரின் பேரில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அழகிரி நேற்று முன்னிலையானார்.