உலகெங்கும் 1,000 இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்க அரசு விருப்பம்

உலகெங்கும் 1,000 இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்க அரசு விருப்பம்

1 mins read

தஞ்சை: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப் படும் தமிழ் வளர் மையத்தை உலக அளவில் ஆயிரம் இடங்களில் அமைக்க விரும்புவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

கலைச்சொற்களை உருவாக்கக்கூடிய சொற்குவை திட்டத்துக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தின் மூலம் புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு மொரீஷியஸ் உட்பட 16 நாடுகளில் தமிழ் வளர் மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து மற்ற இடங்களில் அமைக்க மத்திய அரசு ஆதரவு அளிக்கவேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.