ஆறு மருத்துவக் கல்லூரிகள்; பிரதமருக்கு பழனிசாமி நன்றி

ஆறு மருத்துவக் கல்லூரிகள்; பிரதமருக்கு பழனிசாமி நன்றி

1 mins read
fee30654-03d4-4629-91aa-c56e18abfae1
-

சென்னை: தமிழகத்தில் ஆறு மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும் மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதல்வர் பழனிசாமி தனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் இதன்மூலம் 15,700 எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங் கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

"ரூ.1,950 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவும் அதில் ரூ.1,170 கோடி வழங்கவும் மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பங்காக ரூ.780 கோடி வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் எனது நன்றியை தமிழக மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்," என்று பழனிசாமி கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.