மயில் அடிபட்ட தகராறில் ஓட்டுநர் கொலை

மயில் அடிபட்ட தகராறில் ஓட்டுநர் கொலை

1 mins read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சரக்கு வேன் ஒன்றில் மயில் அடிபட்ட தகராறில் ஓட்டுநர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பில் கொத்தனார் திருஞானபாண்டியனை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியைச் சேர்ந்தவர் சக்திவேல், 47. சரக்கு வேன் ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங் குண்டு வழியாக சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ரோட்டில் நின்றுகொண்டிருந்த மயில் மீது வாகனம் மோதியதில் மயில் காயமடைந்தது.

இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த கொத்தனார் திருஞான பாண்டியன், 47, கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுகாலை மீண்டும் சக்தி வேலிடம் திருஞான பாண்டியன் மயிலை காயப்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது குறித்து கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட திருஞானபாண்டியன் கத்தியால் சக்திவேலை மார்பில் குத்தி யதில் அவர் உயிரிழந்தார்.