இடைத்தேர்தல் முடிவு; தலைவர்களின் கருத்து கருத்து

இடைத்தேர்தல் முடிவு; தலைவர்களின் கருத்து கருத்து

1 mins read

சென்னை: "கடந்த காலப் படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்," என திமுக தலைவர் ஸ்டாலினும் ''தேர்தல் தோல்வி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது," என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கூறியுள்ளனர்.

"ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரபலம், பணபலம் கூடுத லாகவே இருக்கிறது. இதை எதிர்க் கட்சிகளால் எதிர்கொள்ள முடியாத நிலையில்தான் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெற்று உள்ளது. இந்த வெற்றி மக்களின் உண்மையான மனநிலையை பிரதி பலிப்பதாக கருதமுடியாது," என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

"ஸ்டாலினும் அவரது துதி பாடிகளும் மூட்டை மூட்டையாக பொய்களை இறக்குமதி செய்து, விற்பனை செய்ய முயன்றனர். ஆனால், விழிப்புணர்வு பெற்ற மக்களிடம் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை.

"இந்த இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்துள்ளனர்," என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.