சென்னை: நிலமோசடி புகாா் தொடா்பாக திமுக எம்பி ஜெகத்ரட்சகனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சென்னை அருகே குரோம்பேட்டையில் ஒரு தோல் தொழிற்சாலைக்குச் சொந்தமான நிலம், நில உச்சவரம்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 1982ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது.
அந்தத் தோல் தொழிற்சாலையின் தலைவரான இப்போதைய அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், முன்பு பல்வேறு விதிமுறைகளை மீறி அந்த நிலத்தில் 1.55 ஏக்கரை பிரித்து 41 பேருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஜெகத்ரட்சக னுக்கு உறவினர்கள் என்பதும் தெரியவந்தது.
இதன் தொடர்பில் உயர் நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

