சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடங்கிய அரசு மருத்துவர்கள் நேற்று இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புறநோயாளிகள் பிரிவும் அறுவை சிகிச்சைகளும் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசுசாரா முதுநிலை மருத்துவர்கள் மூலம் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தீபாவளிக்குப் பிறகு முதுநிலை மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் பாதிப்பு அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்; தொடரும் போராட்டம்
1 mins read

