நாமக்கல்: ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்ப வந்த வங்கி ஊழியர்கள், பணத்தை முழுவதும் நிரப்பிவிட்டு இயந்திரத்தைப் பூட்டாமலேயே அதன் சாவியையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் அதைப் பார்த்து நாமக்கல் போலிசாரிடம் புகார் தெரிவித்தார். அதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த போலிசார் விசாரணை நடத்தி சாவியை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கேஎஸ் திரையரங்கு அருகில் கரூர் வைசியா வங்கி ஏடிஎம்மில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதன் தொடர்பில் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கரூர் வைசியா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணமும் சாவியும் இருந்தாலும் பணம் எதுவும் திருடப்படவில்லை.

