மது: ரூ.455 கோடி சாதனை

மது: ரூ.455 கோடி சாதனை

1 mins read

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளியையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.455 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி ரூ.100 கோடிக்கும் அக்டோபர் 26ஆம் தேதி ரூ.183 கோடிக்கும் தீபாவளி நாளன்று ரூ.172 கோடிக்கும் மதுவிற்பனையானது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது விற்பனையான ரூ. 325 கோடி அளவைவிட இந்த ஆண்டில் ரூ.130 கோடிக்கு நடந்த அதிக மது விற்பனை புதிய சாதனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.