100 வயது யோகா பாட்டி மரணம்

100 வயது யோகா பாட்டி மரணம்

1 mins read
447ec8a2-7a89-46d9-a1e9-cf655df27b87
யோகா பாட்டியின் நல்லுடல் ஞாயிற்றுக்கிழமை எரியூட்டப்பட்டது. படம்: -

கோவை: மிகவும் பிரபலமான, பத்மஸ்ரீ விருது வென்ற யோகா பாட்டி நானம்மாள் (படம்) தனது 100வது வயதில் கோவையில் சனிக்கிழமை காலமானார். யோகா பாட்டி என்று செல்லமாக அழைப்பட்டு வந்த இவர், கீழே விழுந்ததால் ஒரு மாதமாக படுக்கையிலேயே இருந்து வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏராளமானவர்களுக்கு யோகா கற்றுக்கொடுத்துள்ள பாட்டி, பல யோகா ஆசிரியர்களை உருவாக்கியும் இருக்கிறார். 1920 பிப்ரவரியில் பிறந்த நானம்மாள், 10 வயதில் யோகா பழகத் தொடங்கினார். இவருடைய கணவர் சித்த மருத்துவர். யோகா பாட்டியின் நல்லுடல் ஞாயிற்றுக்கிழமை எரியூட்டப்பட்டது.