புட்டின் வருகை-அமைச்சர் மறுப்பு

புட்டின் வருகை-அமைச்சர் மறுப்பு

1 mins read

சென்னை: மதுரையில் 2020-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளின்போது நடக்க உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டுகளிக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோர் வருகையளிக்க இருப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலில் உண்மையில்லை என்று மதுரை திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும் தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.