'தமிழ்நாட்டை புயல் தாக்காது'

'தமிழ்நாட்டை புயல் தாக்காது'

1 mins read

சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே நவம்பர் 4ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவாகக்கூடிய மகா, கியார் என்ற இரண்டு புயலும் ஓமான் பகுதியை நோக்கிச் செல்லும் என்பதால் தமிழகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று தெரிவித்தார். பேரிடர் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க எல்லாம் தயார் என்றாரவர்.