முதல்வர் வீட்டருகிலேயே மலைபோல் குப்பை என்றால் மற்ற இடங்கள்... நீதிபதிகள் கவலை

முதல்வர் வீட்டருகிலேயே மலைபோல் குப்பை என்றால் மற்ற இடங்கள்... நீதிபதிகள் கவலை

1 mins read

சென்னை: முதல்வர் வீட்டு அருகிலேயே மலை போல குப்பைகுவிந்துள்ள நிலையில், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பார்க்க முடிவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டெங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குப்பைகள் அகற்றப்படாததால் தான் டெங்கி பரவுவதாகக் குறிப்பிட்டனர்.

முதல்வர் வீட்டுக்கு அருகில் மலைபோல குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் முதலமைச்சர் வீட்டருகிலேயே இந்த நிலை என்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பார்க்க முடிவதாகவும் அவர்கள் கூறினர்.

டெங்கி காய்ச்சலைத் தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்த னர்.