ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.3,000

ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.3,000

1 mins read

நாகர்கோவில்: மிகவும் பிரபலமான நாகர்கோவில் தோவாளை பூ சந்தையில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ. 3,000 ஆக உயர்ந்தது. இதன் விலை வெள்ளிக்கிழமை கிலோவுக்கு ரூ.800 முதல் ரூ. 1,000 வரை இருந்தது. நேற்று ஒரே அடியாக மூன்று மடங்கு விலை உயர்ந்தது. தேவைக்கு ஏற்ப சந்தைக்குப் பூ வராததால் விலை கடுமையாக ஏறிவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.