சென்னை: சென்னையில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஆந்திராவின் நெல்லூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிவந்த அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2.50 மணியளவில் பாடி மேம்பாலம் தாதாங்குப்பம் அருகே வந்தபோது முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நடத்துநர் வீரமுத்து உள்ளிட்ட நால்வர் படுகாயம் அடைந்தனர். மேலும் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் படுகாயத்துடன் நடத்துநர் வீரமுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயி-ரி-ழந்-தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் கோவிந்த சாமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் கோவிந்தசாமி தூக்கக் கலக்கத்தில் பேருந்தை ஓட்டியது தெரியவந்தது.
திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

