சென்னை: பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கியுள்ளார். அப்போது ஸ்டாலினிடம் பேசிய ஹெச்.ராஜா, எனது மகள் திருமணத்துக்கு அவசியம் நீங்க வரனும் என அழைப்பு விடுத்தார். அதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் திருமண விவரம் தொடர்பாக பேசி அவரை அனுப்பி வைத்தார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
மு.க. ஸ்டாலினுக்கு ஹெச். ராஜா அழைப்பு
1 mins read
-

